2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : நாள் 5 - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23

ரமளானின் முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : சங்கீதம் காட்டும் சத்திய வழி
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்
  4. நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்

இந்த கட்டுரையில் ஜபூர் 23ஐ ஆய்வு செய்வோம். இந்த 23ம் சங்கீதம் மிகவும் சிறப்பான ஒரு பாடலாகும். பக்தியுள்ள யூதர்களும், கிறிஸ்தவர்களும் இந்த 23ம் சங்கீதத்தை மனப்பாடம் செய்து இருப்பார்கள். இது மிக‌வும் புகழ்பெற்ற, மற்றும் இறைவனிடமிருந்து வரும் பாதுகாப்பையும் பாக்கியத்தையும் கொடுக்கும் சிறப்பான சங்கீதமாகும்.

இந்த சங்கீதத்தை தமிழிலும், அரபியிலும் கீழே கொடுத்துள்ளோம், படித்துப் பாருங்கள்.

அரபியில் ஒலியாக கேட்க விரும்புகிறவர்கள், கொடுக்கப்பட்ட ஆடியோ தொடுப்பை சொடுக்கி கேட்கலாம்.

சங்கீதம் - 23 அதிகாரம்

சங்கீதம் – 23 - அரபியில்

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

الرَّبُّ رَاعِيَّ فَلاَ يُعْوِزُنِي شَيْءٌ

 

2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

فِي مَرَاعٍ خُضْرٍ يُرْبِضُنِي. إِلَى مِيَاهِ الرَّاحَةِ يُورِدُنِي

 

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

يَرُدُّ نَفْسِي. يَهْدِينِي إِلَى سُبُلِ الْبِرِّ مِنْ أَجْلِ اسْمِهِ

 

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

أَيْضًا إِذَا سِرْتُفِي وَادِي ظِلِّ الْمَوْتِ لاَ أَخَافُ شَرًّا، لأَنَّكَ أَنْتَ مَعِي. عَصَاكَ وَعُكَّازُكَ هُمَا يُعَزِّيَانِنِي

 

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

تُرَتِّبُ قُدَّامِي مَائِدَةً تُجَاهَ مُضَايِقِيَّ. مَسَحْتَ بِالدُّهْنِ رَأْسِي كَأْسِي رَيَّا

 

6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

إِنَّمَا خَيْرٌ وَرَحْمَةٌ يَتْبَعَانِنِي كُلَّ أَيَّامِ حَيَاتِي، وَأَسْكُنُ فِي بَيْتِ الرَّبِّ إِلَى مَدَى الأَيَّامِ

   Arabic Bible, Translated by Smith & Van Dyck, 1865

இந்த ஜபூர் 23ல் உள்ள வசனங்களின் பொருளுக்கு ஒரு தலைப்பு கொடுத்தால், அது கீழ்கண்டது போன்று இருக்கும், இதனால் தான், இந்த சங்கீதத்தை யூதர்களும்,  கிறிஸ்தவர்களும் மனப்பாடம் செய்து, தேவையான நேரங்களில் அவைகளை ஞாபகப்படுத்தி, ஆறுதலும் பாதுகாப்பையும், மன அமைதியையும் பெறுகிறார்கள்.

உங்களுக்கும் மனஅமைதியும், பாதுகாப்பும் தேவையென்றால், இந்த ஆறுவசனங்களை படிக்கலாமே.

வசனம்

பொருள்

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;

நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு

நான் தாழ்ச்சியடையேன்.

நம் தேவைகளை சந்திக்கிறார் 

2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,.

ஓய்வில்லாமல் அலையும் உலக வாழ்க்கையில், நமக்கு ஓய்வு தருகிறார்

அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

நம்மை போஷித்து, நாம் புத்துணர்வு அடைய உதவுகிறார்

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி,.

மனச்சோர்விலிருந்து விடுதலை கொடுக்கிறார், சுகமாக்குகிறார்

தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்

நீதியான பாதையில் நடக்க உதவும் வழிகாட்டியாக உள்ளார்

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;

துன்பமான நேரங்களிலும் பாதுகாப்பு

தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்;

நம்மை விட்டு விலகாத இறைவன்

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

நம்மை சிட்சித்து வழிநடத்தி தவறு செய்யாமல் பார்த்துக்கொள்கிறார்

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

எதிரிகளுக்கு முன்பாக வெற்றி தரும் இறைவன்

6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; ன் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கை

அடுத்த கட்டுரையில், 'அல்லாஹ் என்னுடைய மேய்ப்பனாக இருக்கிறான்' என்றுச் சொல்வதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்வோம்.

தேதி: 18th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்